|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 March, 2012

இதுதான் இந்தியா...

பாஸ் பண்ணியும் கண் தெரியாததால் வேலைக்கு சிபாரிசு தேடிய அவலநிலை !
 2008ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. குரூப் பி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பெண் பூர்ணிமா ஜெயினுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலையீட்டால் ரயில்வேத் துறையில் வேலை கிடைத்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் ஜெயின். அவரது மகள் பூர்ணிமா ஜெயின். 25 சதவீதம் மட்டுமே கண்பார்வையுள்ளவர். அவர் 2008ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. குரூப் பி தேர்வில் 1,123 மதிப்பெண்கள் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். நேர்காணலிலலும் 300க்கு 210 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் அவரது பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி அவருக்கு அரசு வேலை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து அவர் இது குறித்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரை மத்திய நிர்வாக ஆணைய அலுவலகத்தை அணுகுமாறு கூறியது. அதன்படி அவரும் மத்திய நிர்வாக ஆணையத்தை அணுகினார். அங்குள்ள அதிகாரிகள் நிச்சயம் அரசு வேலை வழங்குவதாக அவரிடம் உறுதியளித்தனர். ஆனால் அவருக்கு பணிநியமன உத்தரவு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் சிபிஎம் எம்.பி. பிருந்தா காரத் உதவியால் பிரதமர் மன்மோகன் சிங்கை அணுகி தனது நிலையை எடுத்துக் கூறினார். பிரதமரின் தலையீட்டால் பூர்ணிமாவுக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்துள்ளது. அவர் அடுத்த வாரம் பணியில் சேர்கிறார். 4 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு வேலை கிடைத்துள்ளதில் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...