|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2012

பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்க ஐகோர்ட் உத்தரவு.


 பொதுமக்களின் அறிவிலிருந்து முற்றாக மறைக்கப்பட்டுவரும் பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்க வேண்டுமென மதுரை ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, கன்யாகுமரி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவைத் தொடர்பான மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் கூறியதாவது: பாரம்பரிய மருத்துவ முறைகளை முடக்கிய பல உதாரணங்கள் வலாற்றில் உள்ளன. சித்தா மற்றும் ஆயுர்வேதம் ஆகிய 2 மருத்துவ முறைகளின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. ஆயுர்வேதம் என்ற சொல்லுக்கு &'வாழ்வின் அறிவியல்&' என்று பொருள். ஆனால், இச்சொல் வெறும் ஒரு மருத்துவ முறை என்ற குறுகிய அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
Encyclopaedia Britannica -ல் உள்ள தகவல்களின்படி பார்த்தால், கி.மு.800 முதல் கி.பி.1000 வரையிலான காலகட்டம், இந்திய மருத்துவத்தின் பொற்காலமாக குறிக்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில், சாரக-சம்ஹிதா மற்றும் சுஸ்ருத-சம்ஹிதா போன்ற மருத்துவ நூல்கள் இயற்றப்பட்டன. தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தை எடுத்துக்கொண்டால், அதன் வரலாறு மிக மிகப் பழமையானது. அம்மருத்துவ முறையில் ஏராளமான சிறப்புக் கூறுகள் உள்ளன. ஆனால், கடந்தகால வரலாற்றில் அம்மருத்துவ முறைக்கு கிடைத்த போதுமான ஆதரவின்மை மற்றும் காலனிய ஆதிக்கம் போன்ற காரணிகளால் அது இன்று தேய்ந்து போய் கிடக்கிறது. கடந்த 1961ம் ஆண்டு, மருத்துவக் கல்வி தொடர்பாக நியமிக்கப்பட்ட முதலியார் கமிட்டியானது, பாரம்பரிய மருத்துவத்துடன், நவீன மருத்துவத்தையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. ஆனால், அந்தப் பரிந்துரை செய்யப்பட்ட காலகட்டத்தில், அலோபதி மருத்துவம் சமூகத்தை மிகவும் வலிமையாக ஆக்ரமித்திருந்தது. அதனோடு சேர்ந்து, மாநில அரசுகளும், பாரம்பரிய மருத்துவப் படிப்புகளை வழங்கிவந்த கல்வி நிறுவனங்களுக்கு கடிவாளமிட்டுக் கொண்டிருந்தன. எனவே, எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. இவ்வாறு நீதிபதி கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...