|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 March, 2012

கூறு கெட்ட கோமாளிகள் தானே நாம்!

சரியாக படவில்லை!
உள்நாட்டு போரா இங்கு??
இல்லை ... முள்ளி வாய்கால் முன்னோட்டமா??
யார் உங்களை ஆயுதம் தாங்கி
இங்கு எதிர்த்தார்கள்??

கூடன் குளத்தை ,தமிழக பத்து மாவட்ட
போலீஸ் படை, தரை படை , கடற்படை
சூழ்வதும் , மாநில அரசின் உரிமையை காவு கொடுத்து
வேடிக்கை பார்க்கும் செல்வி .ஜெயலலிதா
திராணியும் சரியாக படவில்லை...

எதிர்பார்க்கும் மின்சாரமும் கையில் கிடைக்க போவதும் : TN Expected Electricity Vrs Actual

கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 2100MW .
அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும் = 1260 MW.
( கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது என்பதனை கவனத்தில் கொள்க)
(A) HOWEVER ASSUMING KK ACHEIVES 60% PRODUCTION TARGET= 1260 MW

இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் : 157.5 MW தேவை
(b) LESS : 157 .5 MW

தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50%(என்று ஊடகங்கள் சொல்வது ) 551.25 MW (ஆனால் நடைமுறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே தரபடுகிறது )
(c ) LESS HOWEVER ASSUMING 50% = 551 .25MW

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 27% இழப்பிற்கு 149 MW
(d) LESS 149 MW

தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம் = 402MW.
(A) - (b)- (c) -(d) = 402MW.

இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு=322 MW .

இதுவே கல்பாக்கம் போலவே கூடன்குளமும் 40% உற்பத்தி மட்டுமே செய்தால் மாநிலத்துக்கு 30% மட்டுமே கிடத்தால் வெறும் 40 MW தான்!!

அணு உலை அமைக்கும் 13000 crores INR. & Running cost 5000 Crores INR செலவில் அதிகபட்சம் கிடக்கப்போகும் 324 MW , அல்லது குறைந்த பட்சம் கிடக்கப்போகும் 40 MW காட்டிலும் வேறு என்னதான் செய்யலாம்* ? :

1)மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு=500mw +++ .இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2)மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 27% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=1575 mw.

3)உயிர்ம எரிபொருள்= 900 மெகாவாட்.உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .

4)வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்=5,000 மெகாவாட்.
(தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.)

இங்கு ஒரு விஷயம் கவனத்தில் கொள்க நான் அணு உலையின் பாதுகாப்பு ** என்னும் விஷயத்திற்கு போகவே இல்லை !!

மண்ணில் முழங்கால் இட்டு 25,000
மக்கள் வாழ்வாதாரம் என்னும் ரொட்டிக்கு
இறைஞ்சுகிறார்கள் .., நீங்கள்
அதிகார அணிவகுப்பு காட்டி
அம்மக்களுக்கு உரிமையான அமைதியான போராட்டத்தையும்
பறிப்பதும், தன்னலம் மறந்து தன் நிலம்
காக்க எண்ணிய 25000
கோழிக்குஞ்சுகளை தின்று ஏப்பம் விட மாநில ,மத்திய
அனகோண்ட ராட்சச பாம்புகள் என
வரிசையாய் , வாய் பிளந்து ...சரியாக படவில்லை...

பொருளாதார ரீதியாக இது ஒரு குப்பை திட்டம் என்று சொல்லவே இந்த கட்டுரை . வெறுமனே 40 MW தர போகும் , திட்டத்துக்கு 20000 Crores INR செலவழித்தும், பின் அதனை தூக்கி நிறுத்துவதற்கு முப்படை அணிவகுப்பு செலவுக்கும் , நாளை நமக்குதான் வரியாக போடுவார்கள் !

இந்திய, தமிழக அரசுக்கு வரி கட்டாமல் , அன்டர்டிகாவில் இருந்து சந்தோசமாய் காட்டு கத்து கத்தலாம் . உண்மை என்னமோ இங்கு வரி தொடர்ந்து கட்டும் கூறு கெட்ட கோமாளிகள் நாம் தானே ....
P.N :
1)*Alternative Energy Sources taken from TNEB Research articles
2) ** Author is Not Nuclear Scientist but Distinction holder in Quantitative methods in Business Application (MBA)
 நன்றி: ச. வெ .ரா  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...