|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 April, 2012

ஜெனிவா தோல்வியின் எதிரொலியே இலங்கையின் புலிக் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு மூன்று முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன எனவும், அவ்வாறு பயிற்சி பெற்ற 150 புலிகள் இலங்கை திரும்பியுள்ளனர் எனவும், புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இலங்கை ஊடகம் வெளியிட்ட செய்தியால் இந்தியா கவலை அடைந்துள்ளது எனப் தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் வைத்தே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் நம்புகின்றன.
இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள தூதரகம் மூலமாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேசமயம் தமிழக போலீஸ் தலைவரும் இதை மறுத்துள்ளார்.


ஆனாலும் இந்தியா மீது திட்டமிட்டே இலங்கை இவ்வாறு பழிசுமத்தியுள்ளதாக தில்லி கருதுகிறது.அந்த செய்தியில் புலனாய்வு அமைப்பை ஆதாரமாக காட்டியுள்ளதன் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக இந்தியா கருதுகிறது எனவும் தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் இந்தியா இந்த விவகாரத்தை தனியே அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளாது என்றும், வெளிவிவகார அமைச்சக மட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர், இலங்கை இந்தியா இடையிலான உறவுகளில் நெருடல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...