|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 May, 2012

பொதுக்கழிப்பிடத்துக்கு முன்னால் பிறந்த குழந்தை


திருப்பூர் நெசவாளர் காலனியில் உள்ள பொதுக்கழிப்பிடத்துக்கு அருகில், ஆண் குழந்தை கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் பி.என்.,(பெருமாநல்லூர்) ரோட்டில் உள்ள 26வது வார்டு நெசவாளர் காலனியில் ஒரு மாநகராட்சி பள்ளி உள்ளது. அதன் எதிரில், உள்ள கழிப்பிடத்துக்கு அருகில் கடந்த ஆண் குழந்தை கிடந்தது.அக்குழந்தை அழுதது. அதைக்கேட்ட அப்பகுதி மக்கள் சிலர் அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து நான்கு அல்லது ஐந்து நாட்களே ஆன நிலையில் ஒரு பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது.மேலும், அந்த குழந்தையின் உடலில் எதோ ஒரு வகையான நோய் தாக்குதல் காணப்பட்டதால் அங்கிருந்த சிலர் தகவல் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு குழந்தைக்கு உணவும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு திருப்பூரில் இயங்கிவரும் "சேவ்' என்ற ஒரு சேவை அமைப்பிடம் குழந்தை பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டது.பிறந்து ஐந்து நாட்கள் ஆன பச்சிளம் ஆண் குழந்தையை, கழிப்பறை அருகே போட்டுச் சென்றவர்கள் யாரென தெரியவில்லை.குழந்தையை யாராவது கடத்தி வந்தவர்கள், அங்கு படுக்க வைத்துவிட்டு தப்பித்துச் சென்றிருக்கலாம் அல்லது கழிவறைக்கு சென்றிருக்கலாம், அதற்குள் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் குழந்தையை விட்டுவிட்டு ஓடியிருக்கலாம் என்ற கோணத்தில்  போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...