|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 June, 2012

தட்கல் முறையில் மாற்றம்!


தட்கல் மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தில் பெருமளவில் ஊழல் நடைபெறுவதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து, தட்கல் முன் பதிவுக்கு தனியாக நேரம் மற்றும் கவுண்டர்களை ஒதுக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பயணிகளுக்கான தட்கல் டிக்கெட்டுகளை புரோக்கர்கள் முன்கூட்டியே பெற்றுக்கொண்டு அதை கூடுதல் விலைக்கு விற்று வருவதாக நீண்ட நாட்களாகவே புகார் இருந்துவருகிறது.இந்நிலையில் சமீபத்தில் சில ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள், தட்கல் டிக்கெட்டுகளை புரோக்கர்கள், ரயில்வே அதிகாரிகள் துணையுடன் முறைகேடாக முன்பதிவு செய்வதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தின.

இதையடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக அவசரகால ஒதுக்கீடு முறையைக் கொண்டு வர முடிவுசெய்யலாமா என ரயில்வே நிர்வாகம் ஆலோசித்ததாக கூறப்பட்டது.ஆனால் அந்த முடிவு கைவிடப்பட்டது.அதற்குப் பதிலாக , தட்கல் முன் பதிவுக்கு தனியாக நேரம் மற்றும் கவுண்டர்களை ஒதுக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த தட்கல் கவுண்டர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், பணி நேரத்தின்போது கவுன்டர்களில் இருக்கும் புக்கிங் கிளார்க்குகள்  மொபைல்போன்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...