|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 October, 2012

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நாடு முழுவதும் 33,100 வழக்குகள்!


இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை. 2012 ம் ஆண்டு மட்டும் நாடுமுழுவதும் குழந்தைகளுக்கு எதிராக 33,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்.இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் 2012ல் இந்திய குழந்தைகள் என்ற தலைப்பில் ஆய்வுகளை மேற்கொண்டது. இதில்தான் அந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
33,100 வழக்குகள் பதிவுமுந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2011ல் இந்திய குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளன. குழந்தை கடத்தல் விவகாரம் 43 சதவீதமும், கற்பழிப்பு வழக்குகள் 30 சதவீதமும் உயர்ந்துள்ளன. 2011ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக 33,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 6406 வழக்குகள் கூடுதலாகி உள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் 2009ம் ஆண்டில் 2.3 சதவீதம். 2011ம் ஆண்டில் அதிகரித்த குற்ற புள்ளி விவரம் 2.7 சதவீதம். டெல்லியில் 25.4 சதவீதமும், அந்தமான் நிகோபார் தீவுகளில் 20.3 சதவீதமும், சண்டிகரில் 7 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 6 சதவீதமும், கோவாவில் 5.1 சதவீதமும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன.உத்தரபிரதேசம் நம்பர் 1இந்தியாவிலேயே உத்தரபிரதேசமாநிலத்தில்தான் குழந்தைகளுக்கு எதிராக 16.6 சதவீத குற்றங்கள் பதிவாகி உள்ளன. மத்திய பிரதேசத்தில் 13.2 சதவீதமும், டெல்லியில் 12.8 சதவீதமும், மராட்டிய மாநிலத்தில் 10.2 சதவீதமும், பீகாரில் 6.7 சதவீதமும், ஆந்திராவில் 6.7 சதவீதமும் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
பெண் சிசுக்கொலை  உத்திரபிரதேசம் டெல்லி போன்ற மாநிலங்கள் குழந்தை கடத்தலில் 43 சதவீதங்களுடன் முக்கிய இடம் வகிக்கிறது. 44.5 சதவீத கற்பழிப்பு வழக்குகள் மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பதிவாகி உள்ளது. சிசு கொலை 19 சதவீதம் உயர்ந்துள்ளது. இவற்றில் மராட்டியம், சட்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டும் 56 சதவீத சிசு கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பாலியல் தொழிலில் குழந்தைகள்  பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பெண் குழந்தைகளை வாங்குவதில் மராட்டிய மாநிலம் 74 சதவீத வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தான் பெண்களை விற்கும் குற்றம் 77 சதவீதம் நடந்துள்ளது.
18 வயதுக்கு குறைவான பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதில் 298 வழக்குகள் பதிவாகி மேற்கு வங்க மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது. இதன் அடுத்த இடங்களில் பீகார், அசாம், ஆந்திரா மாநிலங்கள் உள்ளன. கற்பழிப்பு சம்பவங்கள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 23.6 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் உத்திர பிரதேசம், மராட்டியம் மாநிலங்கள் உள்ளன.தங்களுக்கு என்ன நடக்கிறது என்று பிஞ்சுக்குழந்தைகளுக்கு தெரிவதில்லை. இதெல்லாம் வெளியில் தெரிந்த குற்றங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. ஆனால் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குற்றங்கள் உள்ளன. எனவே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...