|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 October, 2012

அடுத்த அடிக்கு தயாராகும் ருபாய்!

இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று சர்வதேச பொருளாதார நிதியம் (International Monetary Fund) கணித்துள்ளது.2011ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. ஆனால், அடுத்து மானியங்களை அதிகரித்து, கடன் அளவை இந்தியா அதிகரித்துக் கொண்டது. மேலும் அரசியல் நெருக்கடி, கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அமலாக்காமல் தாமதம் செய்ததால் முதலீடுகளும் குறைந்துவிட்டன.மேலும் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்த ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல்கள், பெரும் மின்சாரப் பற்றாக்குறை, வரித்துறை சீர்திருத்தங்களில் தொய்வு ஆகியவையும் அன்னிய முதலீட்டாளர்களை கவலையடையச் செய்துவிட்டன. இதனால் இந்தியாவுக்கு போதிய முதலீடுகள் வரவில்லை.

இதனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாகவே உள்ளது. இந்த நிலைமை மேலும் மோசமாகும். மொத்தத்தில் இந்த ஆண்டு நாட்டின் வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாகவே இருக்கும் என்று ஐஎம்எப் கூறியுள்ளது.அதே நேரத்தில் இப்போது வரும் சில்லறை வணிகம், காப்பீட்டுத்துறை, பென்சன் துறை, விமானத்துறைகளில் அன்னிய முதலீட்டை இந்தியா அனுமதிக்க ஆரம்பித்து அதற்கான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும் பெருமளவு மானியத்தை சாப்பிடும் சமையஸ் கேஸ், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி அரசின் செலவை இந்தியா குறைத்துள்ளது.இதனால் 2013ம் ஆண்டில், அதாவது அடுத்த ஆண்டில், இதற்கான பலன்களை இந்தியா பெறும் என்றும் ஐஎம்எப் கூறியுள்ளது.இப்போதுள்ள நிலையில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 3.8 சதவீதமாக அதிகரிக்கவுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...