|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 October, 2012

ஒரு சின்ன பெக் உங்களை மாற்றும்!


ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று நினைப்பது தவறானது. ஏனெனில் அவற்றிலும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்காக நிறைய குடிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான். அதிலும் இதுவரை ஆல்கஹாலிலேயே ஒயின் மற்றும் பிராந்தி போன்றவற்றை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம் என்பது தெரியும். ஆனால் விஸ்கியை குடித்தாலும், அதுவும் அளவாக குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இப்போது விஸ்கியை குடித்தால் என்ன நன்மை இருக்கிறது என்று பார்போமா!!!
நல்ல தூக்கம்- உடல் அதிக களைப்புடன் இருக்கும் போது 1-2 சின்ன பெக் விஸ்கியில் ஐஸ் போட்டு குடிக்கலாம். அதுவும் அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் மனமானது சற்று ரிலாக்ஸ் அடைந்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
புற்றுநோய்- நிறைய பேர் ஆல்கஹால் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் விஸ்கி சாப்பிட்டால், புற்றுநோய் குணமாகும். எப்படியெனில் விஸ்கியில் எலாஜிக் ஆசிட் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் விஸ்கியில் அளவுக்கு அதிகமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஒரு பெக் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.
நீரிழிவு- விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால், நீரிழிவு குணமாகும்.
மன அழுத்தம்- மனம் அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். அதிலும் மன அழுத்தம் ஏதேனும் ஒரு காரணத்திற்கு ஏற்பட்டால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும். அதுவே நீடித்தால், உடல் நலம் பாதிக்கப்படும். மேலும் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அதனை குறைக்க ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டு தூங்கினால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.
சளி மற்றும் ஜலதோஷம்- உடலில் சளி அல்லது ஜலதோஷம் வந்துவிட்டல், அதனை போக்க மாத்திரைகளை விட, விஸ்கி மிகவும் சிறந்தது. அதிலும் ஒரு பெக் விஸ்கியுடன், சிறிது சுடு தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். அதுவும் குடிக்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
மற்ற நோய்கள்- விஸ்கியை மருத்துவரின் ஆலோசனையின் படி குடித்து வந்தால், 50% பக்கவாதம் வராமல் இருக்கும். மேலும் இதனை குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து, எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கும்.ஆகவே எப்போதும் ஆல்கஹாலை உடலுக்கு நீங்கு என்பதை நினைக்க வேண்டாம். விஸ்கியை அளவோடு குடித்தால் வளமோடு வாழலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...