|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 November, 2012

மோடியை கேவலப்படுத்த மோசடி செய்த காங்கிரஸ்!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இலங்கை அகதிகள்' படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்த காங்கிரஸின் மோசடித்தனம்தான் இப்பொழுது சமூக வலைதளங்களின் ஹாட்டாபிக்!குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் எப்படியாவது முதல்வர் நரேந்திர மோடியை வீழ்த்திவிட துடித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த துடிப்பு கொஞ்சம் ஓவராகிவிட்டது போல! குஜராத் மாநிலத்து குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் அவமதிப்படுகிறார்கள்.. இந்த விவகாரத்துக்கு தீர்வு காணவில்லை மோடி அரசு என்று சாடி ஒரு படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்தது! 

ஆனால் மோடி டீமோ இந்த படத்தோட பூர்வோத்ரத்தைக் கண்டுபிடித்துவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான யுனிசெப்-ன் போட்டோகிராபர் எடுத்த இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த தாயும் சேயும் இருக்கும் படம்தானாம் இது! இதை வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் களேபர விவாதம் நடக்கிறது! தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சி இப்படி ஏடாகூடமான சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதால் கதிகலங்கிக் கிடக்கிறது!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...