|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 December, 2012

மாப்பிள்ளை மொக்கச்சாமி காலண்டர் ஆரம்பம்!

மாயன் காலண்டர் முடிந்ததது .. நாளைக்கு கார்த்தாலே மாப்பிள்ளை மொக்கச்சாமி காலண்டர் ஆரம்பம்! மாயன் காலண்டர் 2012 ம் ஆண்டு டிசம்பர் 21க்கு பிறகு தேதிகள் குறிக்கப்படாததால், நாளை உலகம் அழிந்துவிடும் என்ற பீதி பரவியுள்ளது. ஆனால் இது உண்மையில்லை முழுக்க முழுக்க வதந்திதான் என்று ஜோதிடர்களும், விஞ்ஞானிகளும் கூறியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதி மக்களை ஆட்டிப்படைத்து வரும் வார்த்தை மாயன் நாட்காட்டி.....தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மாயன்கள் விட்டுச் சென்ற பல பொக்கிஷங்கள் பல்வேறு துறைகளில் அவர்கள் வல்லவர்கள் என்பதை உணர்த்தி வருகிறது. மேலும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி 21ம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் வெளியானது. இதைவைத்து 2012 என்கிற ஹாலிவுட் திரைப்படம் வெளியானதால் அச்சமும், பீதியும் உலகத்தில் அதிகமானது. அவர்கள் சொன்ன தேதிக்கு இன்னமும் சில மணி நேரங்களே உள்ளது. பேஸ்புக்கில் கவுண்டவுன் கூட போட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் மாயன் காலண்டர்படி நாளைக்கு உலகம் அழியாது என்று அடித்துக் கூறுகின்றனர் ஜோதிடவியல் வல்லுநர்கள். இதே கருத்தைத்தான் நாசா விஞ்ஞானிகளும் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...