|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2013

இளிச்சவாயன் தமிழன்!


கடல் படத்தின் டீஸர் என்ற பெயரில் சமீப காலமாக மணிரத்னம் அண்ட் கோ செய்து வந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் காட்டமாகிவிட்டிருக்கும் நேரத்தில், அவர் செய்துள்ள இன்னொரு வேலை, தமிழ் சினிமாவை அவரைப் போன்றவர்கள் எந்த அளவு கிள்ளுக் கீரையாக மதிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மணிரத்னம் எடுத்துவரும் கடல் படத்தில் ஹீரோவாக கார்த்திக் மகனும், ஹீரோயினாக ராதாவின் இளையமகளும் அறிமுகமாகிறார்கள். தான் அறிமுகப்படுத்தும் இந்த இரு புதுமுகங்களின் படங்களைக் கூட யாருக்கும் காட்டாமல் ரகசியம் காத்த மணிரத்னம், ஒரு நாள் ஹீரோவின் தலைமுடி, அடுத்த நாள் ஹீரோவின் முதுகு, இன்னொரு நாள் ஹீரோவின் கால் என்று பிட் பிட்டாக டீஸர் காட்டி வெறுப்பேற்றி வந்தார். தண்ணீரில் ஒரு படகு சொய்ங் என்று நுழையும். அவ்வளவுதான்.. அதற்குப் பெயர் 'வீடியோ டீஸராம்'. கிட்டத்தட்ட மெரினாவைக் காட்டி இதான் கடல் என்று சொல்வது போலிருந்தது. ஹீரோயின் முகத்தையும் இதே லட்சணத்தில் 'பிட்' காட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஹைதராபாதில் வைத்து தெலுங்கு ரசிகர்களுக்கு ஹீரோவையும் ஹீரோயினையும் அறிமுகம் செய்து வைத்து, தெலுங்கில் இவர்களை முதல் முறையாக அறிமுகம் செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று அறிவித்துள்ளார். இதையே ஹீரோயினின் அம்மா ராதாவும் கூறியுள்ளார். அப்படியெனில் தமிழில் முதலில் அவர்கள் முகங்களைக் காட்டுவது அத்தனை கேவலமான விஷயமா? பணம் பார்ப்பது இங்கே... படம் காட்டுவது இங்கே... ஆனால் பெருமையும் மகிழ்ச்சியும் ஹைதராபாதில் வைத்து அறிமுகம் செய்தால்தான் வருமா? என கடுப்பாகக் கேட்கிறார்கள் தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள். இதே ராதா, தன் மூத்த மகள் கார்த்திகாவை இதே மாதிரிதான் தெலுங்கில் முதலில் அறிமுகம் செய்தார். அங்கே சூப்பர் டூப்பர் ப்ளாப் நாயகியாகி வெளியேறினார். அவருக்கு கடைசியில் கைகொடுத்தது தமிழ் சினிமாதான் என்பது மறந்துவிட்டது போலிருக்கிறது!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...