|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 January, 2013

தலைமை ஆசிரியர்கள் ஆபாசம்?

வால்பாறையில், சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது; 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப் படங்கள், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் வெளியானது. இது, இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி, பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.வால்பாறை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, ஆபாச ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை, சோலையாறு எஸ்டேட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதயன், 49, வேறு ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையுடன், பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன.இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, பள்ளியில் பயிலும் மாணவியருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...