|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 January, 2013

இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்?

சகுனி கருணாநிதி அரசியலில் அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகி! லோக்சபா தேர்தலில், 16 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் காங்கிரஸ் முரண்டு பிடித்து வருகிறது. ஆனால், எட்டு சீட்டுகளை மட்டுமே ஒதுக்க தயாராக உள்ள தி.மு.க., காங்கிரசை வழிக்கு கொண்டுவர, மீண்டும், "டெசோ' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக, ராகுலை தேர்வு செய்ததும், அவருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி, வாழ்த்து அனுப்பினார். அக்கடிதத்திற்கு, நன்றி தெரிவித்து, ராகுல் தரப்பில் எவ்வித பதிலும் அனுப்பவில்லை. இதனால், ராகுல் மீது, தி.மு.க., தரப்பில், அதிருப்தி உருவாகியுள்ளது.ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு, சோனியா விடுத்த அழைப்பு, தி.மு.க., தரப்புக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்ள, மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து செல்லும் பொறுப்பு, தி.மு.க.,வுக்கு இருக்கும் போது, மறைமுகமாக, தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட சில கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கிறது என, தி.மு.க., தரப்பு கருதுகிறது.லோக்சபா தேர்தலில், தி.மு.க., அணியில், 16 சீட்டுகளை காங்கிரஸ் தரப்பு கேட்டுள்ளதாகவும், அதற்கு தி.மு.க., தரப்பில், எட்டு தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்யப்படும் என, கூறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, சுமூகமாக நடப்பதற்கு, ராகுலின் முழு ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் தி.மு.க., தரப்பில் எழுந்துள்ளது. இதனால், காங்கிரசுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்க, இலங்கை தமிழர்கள் பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்துள்ளது.

இலங்கையில், இந்து கோவில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், அவற்றை தடுத்து நிறுத்த. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சமீபத்தில் தி.மு.க., முன் வைத்துள்ளது.அடுத்த கட்டமாக, அடுத்த மாதம், 4ம் தேதி, "டெசோ' கூட்டம் சென்னையில் நடைபெறும் என, தி.மு.க., அறிவித்துள்ளது. "டெசோ' கூட்டம் நடத்துவதன் மூலம், இலங்கை தமிழர்களை ஆதரிக்கும் சில கட்சிகள், தி.மு.க., தலைமையின் கீழ் அணிவகுக்க வாய்ப்பு உள்ளது.தொகுதி பங்கீடு மற்றும் ராகுல் செயல்பாட்டில் தி.மு.க., அதிருப்தி அடைந்தால், காங்கிரசை கழற்றி விட்டுவிட்டு, இலங்கை தமிழர்களை, ஆதரிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் தி.மு.க.,விடம் திட்டம் உள்ளது. இது தொடர்பாக, சுவீஸ், ஜெர்மனி, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் சிலர், கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்."நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' என, வெளிநாடு வாழ் தமிழர்கள் தெரிவித்த கருத்துக்களை, தனது அறிக்கை வாயிலாக கருணாநிதி வெளிப்படுத்தி உள்ளார்.
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...