|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 February, 2013

பிரபாகரன் வாழ்க்கை சினிமா!விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:- 
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். விடுதலைப்புலிகள் தரப்பில் இந்த படத்தை எடுப்பதற்காக ஆட்சேபனை இருக்காது என்று கருதுகிறேன். 

இதற்கான நிறைய தகவல்களை அவர்கள் எனக்கு கொடுத்து உள்ளனர். வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக எடுத்துள்ளேன். பதினோரு வருடங்கள் வீரப்பன் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீரப்பனிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்களிடம் விசாரித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். உண்மையான கேரக்டர்களே இதில் உள்ளன. யாரையும் புண்படுத்தும் சீன்கள் படத்தில் இல்லை. 
இப்படத்துக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சில சீன்கள் நீக்கப்பட்டு உள்ளன. பிப்ரவரி 14-ல் படம் ரிசீலாகிறது. வேந்தர் மூவிஸ் மதன் படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தில் அர்ஜுன், கிஷோர், லட்சுமிராய், விஜயலட்சுமி, சுலக்ஷனா, ஜெயபாலன், அருள்மணி, சம்பத்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...