|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 February, 2013

இயக்குனராகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

கோலிவுட், பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டையும் கடந்து உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் என பல முகங்களைக் கொண்டிருப்பது தெரிந்த செய்தி. தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராகும் முயற்சியில் இறங்கியிருப்பது தான் ஆச்சர்யமான செய்தி.இயக்குனராக வேண்டும் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இன்றைய நேற்றைய முடிவல்ல. பல வருடங்களாக அவர் மனதில் இருந்து வந்த திட்டத்தை இப்போது தான் செயல்படுத்தத் துவங்கியிருக்கிறார்.   லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நீண்ட நாட்களுக்கு முன்னரே திரைக்கதை மற்றும் இயக்கம் சம்மந்தமான படிப்புகளை படித்து முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கார் விருது வாங்கியிருந்தனர்.   ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய நண்பரான ரசூல் பூக்குட்டியும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து தான் இந்த படத்தை துவங்குகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் படத்தைப் பற்றி ரசூல் பூக்குட்டி “ இந்திப் படம் எடுக்க எல்லாம் தயாராகிவிட்டது.  சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளாராம்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...