|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 February, 2013

கும்பமேளாவில் பணத்தை இறைத்துவிட்ட நித்தி...

நாரதர் எங்கிருந்தாலும் கலகம் இருக்கும் என்பது புராணம்.. ஆனால் நிகழ்காலத்தில் நித்தியானந்தா எங்கு போனாலும் கலகமும் களேபரமும்தான் என்பது நிதர்சனம்.. கும்பமேளாவுக்குப் போன நித்தியானந்தா அங்கேயும் சாதுக்களிடையே சண்டையை மூட்டிவிட்டு விட்டு வந்திருக்கிறார். கும்பமேளா என்பது ஆன்மீகத் திருவிழாவாக இருந்தாலும் இந்து மதத்தைக் காக்க தற்கொலைப்படையாக செயல்படும் அகாடாக்களில் இடம்பெற்றுள்ள சாதுக்களின் சங்கமமாகவே இருந்து வருகிறது. இம்முறை கும்பமேளாவில் சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவும் கலந்து கொண்டார். அவர் சாரட் வண்டியில் போய் புனித நீராடியதன் பின்னணி இப்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது. அகாடாக்களில் முக்கியமானது நிர்வாண சாதுக்களின் அமைப்பான மஹாநிர்வாணி என்பது. இந்த அகாடா சார்பில் நித்தியானந்தாவுக்கு 'மஹா மண்டலேஸ்வர்' என்ற கவுரவ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டத்துடன்தான் சாரட் வண்டியில் வெள்ளி சிம்மாசனத்துடன் போய் புனித நீராடியிருக்கிறார் நித்தியானந்தா. 

ஆனால் மஹா மண்டலேஸ்வர் என்ற பட்டம் கொடுத்ததற்கு பிற அகாடாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏனெனில் இந்த 'மஹா மண்டலேஸ்வர்' என்ற பட்டம் பொதுவாக 13 அகாடாக்களுக்குமான தலைவர் பதவிக்குரியது. அப்படிப் பட்ட பட்டத்தை ஒரு சர்ச்சைக்குரிய சாமியாருக்கு கொடுப்பதா என்பதுதான் பிற அகாடாக்களின் கேள்வி. ஆனால் நிர்வாண சாதுக்கள் அமைப்போ, தென்னிந்திய சாதுக்களுக்கும் வட இந்திய சாதுக்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தவே 'மஹா மண்டலேஸ்வர்' பட்டம் கொடுக்கப்பட்டதாகவும் இப்பட்டம் கொடுக்கப்பட்டதாலேயே அகாடாக்களின் தலைவராகிவிடமாட்டார் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறது. இந்தப் பட்டத்தை என்னைக்கு திரும்பி வாங்குவாங்களோ?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...