|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 February, 2013

தஞ்சாவூரில் விஜயகாந்துக்கு செம அடி!

தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் பொதுமக்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி பலமாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று விஜயகாந்த் வருகை தந்திருந்தார். அப்போது தேமுதிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி. அப்போது சில தொண்டர்களை அடிக்கவும் தொடங்கினார் அவர். தொண்டர்களை அடித்துக் கொண்டிருந்த . பார்த்தசாரதி எம்.எல்.ஏ. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. விஜயகாந்த் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தார். இதனால் கீழே விழும் நிலைக்குப் போய்விட்டார் அவர். அவர் அணிந்த கண்ணாடி விழக் கூடிய நிலை ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் விஜயகாந்த் அப்படியே ஆடிப்போய்விட்டார்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...