|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2013

இது உலக பாலிடிக்ஸ்!


இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளது பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. 'இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறும் கடமையையும் மேம்படுத்துதல்" எனும் தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

தொடரும் மனித உரிமை மீறல்கள் மேலும் இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காணாமல் போதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், கருத்து சுதந்திரம் பறிப்பு, மனித உரிமை ஆர்வலர்களுக்கு மிரட்டல்கள், நீதித்துறைக்கு அச்சுறுத்தல் உள்ளிட்டவை நீடிப்பது குறித்து இத்தீர்மானம் கவலை தெரிவிக்கிறது. அதிகாரப் பகிர்வு இல்லை ஏன்? இதேபோல் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட துமக்களின் எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு நிறைவு செய்யவில்லை என்பதும் கவலைக்குரியது. அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தொழில்நுட்பக் குழுவின் இலங்கை பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடனான இலங்கை அரசின் ஒத்துழைப்பையும் பேச்சுவார்த்தையையும் பாராட்டுகிறோம். சர்வதேச விசாரணை இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுதல், குறிப்பாக சுயேட்சையான மற்றும் நம்பகத்தன்மையுடனான சர்வதேச விசாரணை போன்றவற்றை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையை வரவேற்கிறோம். 

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் ஆதரவும் எதிர்ப்பும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நேற்று முன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவாதத்துக்காக நேற்று ஜெனீவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்த தீர்மனத்தில் உள்ள சொற்களை மாற்ற வேண்டும் என்பது இந்நாடுகளின் கோரிக்கை. இதே கருத்தை சியராலியோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். ஆனால் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் தீர்மானத்தில் இன்னமும் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற வேண்டும்.. மேலும் வலுவானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர். கியூபா வழக்கமாக மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் நாடு தான். ஆனால், இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக அதை கியூபா எதிர்ப்பது, மாபெரும் துரோகமாகும். சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையின் நட்பு நாடுகள் என்ற வகையில் இந்தத் தீர்மானத்தை அவர்கள் எதிர்ப்பது எதிர்பார்த்தது தான். ரஷ்யாவைப் பொறுத்தவரை அமெரிக்க எதிர்ப்பும் மற்றும் இந்தியாவுக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற கவலையும் தான் தீர்மானத்தை எதிர்ப்பதற்கான முக்கிய காரணமாகும். இது உலக பாலிடிக்ஸ்! 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...