|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 March, 2013

சுயேச்சை எம்.எல்.ஏ. சோமபிரகாஷ் சல்யுட்!

 
ஐஐடி உண்ணாவிரத பந்தலில் தற்பொழுது பீகார் ஒரிசா கேரளா ஆந்திராவை சேர்ந்த ஐஐடி மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை ஐஐடி வளாகத்தில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். 2-வது உலகப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை ஐநா எப்படி விசாரித்ததோ அதுபோல இலங்கை இறுதிப் போரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும் விசாரிக்க வேண்டும்; தென் சூடானில் பொதுவாக்கெடுப்பு நடத்தியது போல் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் ஐஐடி மாணவர்களின் கோரிக்கைகள். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ. சோமபிரகாஷ் என்பவரும் கலந்து கொண்டு தமிழர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ராஜபக்சேவை விரட்டியவர் ராஜபக்சே பீகார் மாநிலம் புத்தகயாவுக்கு வருகை தந்தபோது அதற்கு கடும் எதிர்ப்பு தனி மனிதராக போராட்டம் நடத்தியவர் சோமபிரகாஷ். கொலைகார ராஜபக்சே புத்தகயாவுக்குள் காலடி எடுத்து வைக்குக் கூடாது என்று துணிச்சலுடன் பகிரங்கமாக குரல் கொடுத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...