|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 March, 2013

கொலையும் செய்வாள் டாக்டர்!தெற்கு பிரேசிலில் மருத்துவமனை படுக்கைகளை காலி செய்வதற்காக 20 நோயாளிகளை கொன்றுள்ளார் ஒரு பெண் மருத்துவர். தெற்கு பிரேசிலில் இருக்கும் க்யூரிடிபாவில் உள்ளது இவாஞ்சலிகோ மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் வெர்ஜினியா ஹெலனா டிசோசா (56). அவர், தான் பணியாற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 320 பேரை கொன்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை மாற்றுவது, ஆக்சிஜனை குறைப்பது, மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற பயன்படும் ஊசியைப் போடுவது என்று பல முறைகளைப் பின்பற்றி கொலைகள் செய்துள்ளார்.

 மேலும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களின் விருப்பத்திற்கு எதிராக ஆக்சிஜன் டியூபை பிடுங்கிவிட்டு மூச்சுத் திணறி சாகடிப்பது என்றும் செய்துள்ளார். மருத்துவமனையில் பிரேசில் நாட்டின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து கொன்றுள்ளார். அவர்கள் ஓசியில் படுத்திருப்பதை விட அவர்களை கொன்றுவிட்டால் அந்த படுக்கையில் பணம் உள்ளவர்களை அனுமதிக்கலாமே அதற்காகத் தான் இவ்வாறு செய்துள்ளார். படுக்கையை காலி செய்ய ஆளையே காலி செய்த அவர் 20 பேரை கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே மருத்துவமனையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த 300 பேரையும் இவர் தான் கொன்றிருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெர்ஜினியாவின் டாக்டர் கணவர் கடந்த 2006ம் ஆண்டி குடல் புற்றுநோயால் இறந்தார். அவர் தான் வெர்ஜினியாவின் முதல் பலி என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வெர்ஜினியாவை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...