|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2013

"சத்யமேவ ஜெயதே'


நம் நாட்டு முப்படைகளின் கொடிகளில், "வாய்மையே வெல்லும்' என்ற வார்த்தை குறிப்பிடப்படாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது; இதை, தமிழகத்தைச் சேர்ந்த, காந்தியவாதி, கண்ணன் கோவிந்தராஜ் சுட்டிகாட்டியதை தொடர்ந்து, அனைத்து கொடிகளையும் மாற்றுவதற்கு முப்படைகள் முன்வந்துள்ளன.  நம் நாடு சுதந்திர பெற்ற பின், 1947ல், முப்படைகளின் கொடிகள் வடிவமைக்கப்பட்டன. ராணுவ கொடி, அசோக சின்னத்தின் கீழ், இரண்டு வாள்கள் கொண்டதாகவும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடி இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டது. கடற்படை கொடி, வெள்ளை நிறத்திற்கு மத்தியில் அமைந்துள்ள நான்கு சிவப்பு கோடுகளுக்கு மத்தியில், அசோக சின்னமும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடியும், வடிவமைக்கப்பட்டிருக்கும். அதே போல், நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்ட கப்பற்படை கொடியில், அசோக சின்னத்தின் கீழ், கழுகு பறப்பது போன்றும், இடது பக்க ஓரத்தில் தேசிய கொடி இருப்பது போலவும், வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று கொடிகளிலும், அசோக சின்னத்தின் கீழ், வாய்மையே வெல்லும், அதாவது, "சத்யமேவ ஜெயதே' என, இந்தியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த வார்த்தை, இடம் பெற்றால் மட்டுமே, தேசிய கொடி முழுமை பெறும் என, அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், இம்மூன்று கொடிகளிலும் அவ்வார்த்தை, இடம் பெறவில்லை. இது, சட்டத்திற்கு புறம்பானது என, காஞ்சிபுரம் கீழ்மருவத்தூரைச் சேர்ந்த, காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ், முப்படைகளின் தளபதிகளுக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன், அவருக்கு பதில் எழுதிய அதிகாரிகள், விரைவில், முப்படைகளின் கொடிகளில், சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தை, இடம் பெறும் என, பதில் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, கண்ணன் கோவிந்தராஜ் கூறியதாவது: தேசிய கொடிகளில், வாய்மையே வெல்லும் என்ற வார்த்தை இடம் பெற்றால் மட்டுமே, கொடி முழுமை பெறும். ஆனால், சுதந்திரம் பெற்று இன்று வரை, முழுமை பெறாத கொடியையே நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்பது வேதனைக்குரியது. நம் நாட்டில் உள்ள குடிமக்கள், தேசிய கொடியை தவறாக பயன்படுத்தினால், தண்டிப்பதற்கென, சட்டப்பிரிவுகள் உள்ளன. ஆனால், அரசின் பிரதான அமைப்பே தவறாக பயன்படுத்தி வருவதை, நினைத்தால் வேதனையாக உள்ளது. இருந்தாலும், இனிமேலாவது, மாற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...