|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 April, 2013

Galaxy NGC 4845


ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த ஒரு புதிய கிரகத்தை, ஜெனீவா பல்கலைக்கழகத்தினர் தொடர்ந்து ஆராய்ந்து ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் இந்தக் கிரகம் சூரியனை விடப் பன்மடங்கு பெரியதாகவும், ஒளி பொருந்தியதாகவும் காணப்படுகிறது என்று தெரிவித்தனர். இதுகுறித்து ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இன்டிகிரில் கூறுகையில், பூமி இடம் பெற்றுள்ள நட்சத்திரக் கூட்டம் பற்றி மேலும் அறிய காமா கதிர் வீச்சுகளை ஆராய வேண்டும். கடந்த 2002-ம் ஆண்டில் விஞ்ஞானிகள் முடிவெடுத்து அதன்படி செயல்பட்டு வந்தனர்.
 
தற்பொழுது என்.ஜி.சி. 4845 என்று பெயரிட்டுள்ள நட்சத்திரக் கூட்டத்தில் சூரியனை விட மூன்று லட்சம் மடங்கு அடர்த்தி உடைய ஒரு கிரகம், கருப்புத் துளையினுள் ஒளிர்ந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஒளி கிரகம் கடந்த முப்பதாண்டுகளாக செயலற்றுக் கிடந்தது. தற்போது விழித்தெழுந்துள்ள கருப்புத் துளை நமது வியாழன் கிரகத்தைப் போல 15 மடங்கு பெரிய ஒரு பொருளை அத்துளையின் உள்ளே ஈர்த்துக் கொண்டுள்ளது. இந்த ஒளி கிரகம் 47 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலை வில் காணப்படுகிறது. மேலும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் இந்த ஒளி வெள்ளத்தை ராட்சதக் கிரகம் என்றும் குறிப் பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...