|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 August, 2013

பகத் சிங் தியாகி இல்லையாம்

மண்ணு முட்டி மோகன் அரசு சொல்லுது 



நாட்டுக்காக உயிர் நீத்த பகத் சிங் தியாகியா, இல்லையா என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் இல்லை என்றாலும் கூட பகத்சிங்கின் தீரத்தையும், தியாகத்தையும், யாரும் சந்தேகப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். வெள்ளையர்களுக்காகப் போராடி தனது இன்னுயிரை தூக்குக் கயிற்றிடம் கொடுத்து வீர மரணம் அடைந்தவர் பகத்சிங். ஆனால் அவருக்கு வீர மரணம் அடைந்தவர் என்ற அடைமொழியைக் கொடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக கேட்கப்பட்ட ஆர்.டி.ஐ. கேள்விக்கு, பகத் சிங்குக்கு தியாகி அடைமொழி தரப்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. 

மேலும் அவருக்கு அப்படி ஒரு பட்டம் தரப்பட்டதா என்ற தகவலும் தங்களிடம் இல்லை என்றும் கூறியுள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்குகையில், ஆவணங்களை வைத்துத்தான் பகத்சிங்கின் வீரத்தை பிறர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவரது தியாகம், தீரம் வரலாறு அறிந்தது. பகத்சிங்கின் தியாகத்தையும், தீரத்தையும், வீர மரணத்தையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. பகத்சிங் குறித்த இந்த விவகாரம் நாட்டு மக்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. நமது தியாகிகளுக்கும், நாட்டுக்காகப் போராடியவர்களுக்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். நாட்டுக்காக வீரத் தியாகம் செய்தவர் பகத்சிங் என்பது உண்மை, வரலாறு. அதை ஆவணத்தில் சொல்லித்தான் அறிய வேண்டும் என்பதில்லை. நமது தேசிய பாரம்பரியத்தில், வீரத் தியாக வரலாற்றில் பகத்சிங்கும் ஒரு அங்கம் என்று அவர் விளக்கியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், இதுபோன்ற சர்ச்சையான விஷயங்களில் மக்கள் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சர்ச்சைகளை ஏற்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதனால் பகத்சிங் மற்றும் மற்ற தியாகிகளுக்கு அவதூறு ஏற்படுவதை நாம் உணர வேண்டும் என்றார். இதற்கிடையே, பகத்சிங்குக்கு வீரத் தியாகி என்ற அடைமொழியை வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தப் போவதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...