|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 May, 2014

ஒண்ணுக்கும் பிரோஜனம் இல்லாத கல்லூரிகள்.


தமிழகத்தில் உள்ள 54 பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள், பள பளா கட்டடங்கள் என்று தமிழகத்தில் புற்றீசல் போல நூற்றுக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தரம் என்னவோ மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. இதனை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது கடந்த வாரம் வெளியான அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள். அதன்படி, இந்த ஆண்டில் முதல் செமஸ்டரில் 54 கல்லூரிகளில் ஒருவர் கூட பாஸ் ஆகாத கொடுமை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இதற்கு என்ன காரணம் என்பது தான் தெரியவில்லை.

தேர்வு முடிவுகள் அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளதாம். இதனால், இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் எதனடிப்படையில் தங்களது பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பது என்ற குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.421 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் கீழேதான் தேர்ச்சி விகிதம் உள்ளது. 115 கல்லூரிகள்தான் 50 சதவீத தேர்ச்சியைத் தாண்டியுள்ளன.  357 கல்லூரிகளில் 40 சதவீதத்திற்கும் கீழே உள்ளது தேர்ச்சி விகிதம். 59 கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச பாஸ் சதவீதமே 87.45 சதவீதம்தான்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...