|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 August, 2014

9910641064 லஞ்சத்தை அழிக்கும் வாட்ஸ் அப்டெல்லியில் செல்போனில் உள்ள வாட்ஸ்ஆப் வசதி மூலம் லஞ்சம் கேட்கும் போலீசார் குறித்து புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெல்லியில் பொது மக்களிடம் லஞ்சம் கேட்கும் போலீசார் குறித்து வீடியோ எடுத்து அதை செல்போனில் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்தால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் வீடியோக்களை 9910641064 என்ற செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைத்தால் சில மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மூலம் லஞ்சம் கேட்ட 3 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த முறையை டெல்லி போலீஸ் கமிஷனர் பி. எஸ். பஸ்ஸியின் அறிவுரைப்படி துவங்கினோம். காவல் துறையை லஞ்சம் இல்லா துறையாக்கவே இந்த நடவடிக்கை என்றார். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், இந்த செல்போன் எண் மூலம் புகார் கொடுத்தால் அந்த நபருக்கு போன் செய்து அது உண்மையா என்பதை கண்டறிகிறோம். மேலும் அந்த புகார் வீடியோவை தடயவியல் நிபுணர்கள் சோதித்து உண்மை என்று கூறினால் உடனே சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கைது செய்து, சஸ்பெண்ட் செய்கிறோம். கடந்த 6ம் தேதி மட்டும் 14 வீடியோ புகார்கள் வந்தன. 7ம் தேதி 2 புகார்களும், 8ம் தேதி 27 புகார்களும் வந்தன என்றார். இந்த புகார்களில் 5 தான் உண்மையானவை, மற்றவே இத்திட்டம் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அனுப்பி வைக்கப்பட்டவை என்று துணை கமிஷனர் சிந்து பிள்ளை தெரிவித்தார்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...