|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2011

100வது சதத்துக்காக சச்சின் காத்திருக்க வேண்டும்: அப்ரிடி


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30 ந்தேதி மொகாலியில் நடைபெறும் 2 வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா  பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் இருந்து இந்தியா வந்தது. முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

இந்தியா  பாகிஸ்தான் மோதுவதுதான் கிரிக்கெட் இரு அணி வீரர்களுமே அரை இறுதியில் வெற்றி பெற போராடுவார்கள். தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். இதனால் இந்திய அணியை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுடன் மோதும் போட்டியை எதிர் கொள்வதில் எங்கள் அணி வீரர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்தப் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பது எனக்கு தெரியும். இதன் காரணமாக பரபரப்பான இந்த ஆட்டத்தில் வீரர்கள் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன்.   பொதுவாக இந்தியா  பாகிஸ்தான் மோதுவது என்றாலே வீரர்களுக்கு நெருக்கடி தான் ஏனென்றால் இரு அணிகள் மோதும் போட்டிக்கு அதிக எதிர்பாப்பு இருப்பது தான் இந்திய அணி உள்ளூரில் விளையாடுவதால் எங்களை விட அவர்களுக்கு தான் நெருக்கடி அதிகமாக இருக்கும்.

உலக கோப்பை போட்டியில் நாங்கள் இந்தியாவை வென்றது இல்லை. இந்த வரலாறு மாறும் மிகவும் சவாலான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் குழு தயார் நிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதுவது கிரிக்கெட் போட்டிக்குத்தான் என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தெண்டுல்கர் சர்வதேச போட்டியில் 100 வது சதத்தை எதிர் நோக்கி உள்ளார். அதற்காக அவர் உலக கோப்பை முடியும்வரை காத்திருக்க வேண்டும். தெண்டுல்கர் மட்டுமின்றி எந்த ஒரு இந்திய வீரரையும் நாங்கள் மிகப் பெரிய ரன் எடுக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அப்ரிடி கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...