|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2011

மாற்று ஆபரேசன் மூலம் மிருக உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்

பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற் கான ஆய்வை மேற்கொண் டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.
அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப் பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...