|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 March, 2011

நேற்று ஒரே நாளில் ரூ. 1,32,80,000 தமிழ்நாடுதாங்க

 
தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாகன சோதனையில் நேற்று ஒரு நாள் மட்டும் சிக்கிய தொகை ரூ.ஒரு கோடியே 32 லட்சத்து 80 ஆயிரம். தேர்தல் வந்து விட்டால் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து ஓட்டை வாங்க வேண்டும் என்ற கால்குலேஷனில் ஒரு சில கட்சிகள் இறங்கி விடுகின்றன. பதுக்கி வைத்திருக்கும் கருப்பு நோட்டுகள் எல்லாம் ஓட்டுகளாக மாறும் என்ற வியூகம் அரசியல் கட்சிகள் மத்தியில் இருப்பதுதான் இந்த பார்முலாவின் அடிப்படை.
ஆனால் இந்த முறை தேர்தல் கமிஷன் போட்டுள்ள கிடுக்கிப்பிடியால் , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. போலீசார் மற்றும் வருவாய் ‌அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்து வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.


ஈரோட்டில் 7 லட்சம் : கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 47,000 பணத்தை ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் அலுவலருமான மீனா பிரியதர்ஷினி பறிமுதல் செய்தார். காரில் இருந்த ஜவுளி வியாபாரி முஸ்தபாவிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ. 1 லட்சத்து 47,000 பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் சிக்கிய ‌தொகை ரூ. 7 லட்சமாகும்.


இளையான்குடியில் 26 லட்சம் : இளையாங்குடியில் சாலைகிராமம் விலக்கு பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழக்கரைக்குச் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். ‌காரில் இருந்த ரூபாய் 26 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.


வேலூரில் உச்சம் : வேலூரில் வெயில் மட்டும் உச்சமில்லை, பிடிபட்ட பணமும் உச்சம் தான். நேற்று ஒரே நாளில் ரூ.40 லட்சத்து 15 ஆயிரம் பணம் சிக்கியது.
மதுராந்தகம் தொழுப்பேடு செக்போஸ்டில் வாகன தணிக்கையில் ரூ. 4 லட்சத்து 50,000 ஆயிரம் பணம் சிக்கியது. சென்னை தாம்பரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


50 கிலோ தங்கம் ! காரைக்குடி ‌சாக்கோட்டை செக்‌போஸ்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகள் ரூ. 92 லட்சத்து 15,000 மதிப்பிலான 50 கிலோ தங்க நகைகளும், ரூ. 24 லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகளும் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...