|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 March, 2011

கலைஞர் டிவியின் கவர்ச்சி ஸ்டண்ட்!

தமிழக முதல்வர் கலைஞரின் குடும்ப ஆதிக்கம் தமிழ்சினிமாவில் தலையெடுத்த பிறகு சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது குதிரைக் கொம்பானது. காரணம் தமிழ்நாட்டில் உள்ள 99% தியேட்டர்கள் சன் பிக்சர்ஸ், துரை தயாநிதி. உதயநிதி ஆகிய முன்று பேரிடமே குத்தகை அடிப்படையில் குவிந்திருக்கிறது என்கிறார்கள். இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் கடந்து நான்கு வருடங்களாக 140 சிறுமுதலீட்டு படங்களை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார்கள் பழைய, புதிய தயாரிப்பாளர்கள். இந்தப்படங்களுக்கெல்லாம் தேர்தல் நேரத்து சலுகையாக தற்போது ஒரு அதிரடி சலுகையை தர இருக்கிறது கலைஞர் அரசு. நேற்று முன்தினம் சென்னை 4 ஃபிரேம்ஸ் பிரிவ்யூ தியேட்டரில் திமுக காரரான தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் இராமநாராயனன், குஷ்பூ ஆகியோர் தலைமையில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் படங்களின் தயாரிப்பாளர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் வெளிவராத 140 படங்களில் இருந்து முதல் தொகுப்பாக 50 படங்களை கலைஞர் தொலைக்காட்சி சார்பில் அடக்க விலையோடு பதினைந்து லட்சம் கூடுதலாகக் கொடுத்து வாங்கிக்கொள்ள சம்மதித்து இருக்கிறார்களாம். இதை ஒரு பெரிய விழாவாக எடுத்து 'கலை உலகை காப்பாற்றிய கலைத்தாயின் தலைமகனே' என்று போஸ்டர் அடித்து பாராட்ட இருக்கிறார்களாம். எப்படியோ தேர்தல் நேரத்தில் திரையுலகமே தன்பக்கம் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு ஓட்டுவாங்க நினைக்கும் திமுக அரசின் காஸ்ட்லி ஸ்டண்ட் இது என்றாலும், வெளிவராத படங்களின் ஒரு பகுதிக்கு இப்படியொரு விடிவு காலம் வந்ததே என்று குதூகலிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் நைந்துபோன தயாரிப்பாளர்கள். தேர்தலுக்கான அடிஷனல் போனஸ்ஸா........?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...