|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 April, 2011

பிறந்தது தெய்வாம்சம் நிறைந்த சித்திரை !


கர வருடம்.
விக்ருதி ஆண்டு, 14.04.2011 அன்று நண்பகல் 01.02 மணிக்கு முடிவடைகிறது. 'கர' வருடம், அன்றைய தினம் நண்பகல் 01.03 மணிக்கு உதயமாகிறது. கடக லக்னம், மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறக்கிறது.

இந்த 'கர' ஆண்டில், சித்திரை மாதம், 20ஆம் தேதி (03.05.2011) அன்று, ராகு/கேது பகவான்கள் முறையே தனுசு, மிதுன ராசிகளிலிருந்து விருச்சிக, ரிஷப ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அங்கே அவர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரித்துவிட்டு 15.01.2013 அன்று துலாம், மேஷ ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

'கர' ஆண்டு, சித்திரை மாதம், 25ஆம் தேதி (08.05.2011) அன்று குரு பகவான், மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அங்கே அவர் ஓராண்டு காலம் சஞ்சரித்துவிட்டு 17.05.2012 அன்று ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

கர வருஷத்திய பலன் வெண்பா:
'கர வருடமாரிபெய்யுங் காசினியுமுய்யும்
உரமிகுத்து வெள்ளமெங்குமோடும்ரூநிறைமிகுத்து
நாலுகாற்சீவ னலியுநோயான்மடியும்
பாலும்நெய்யுமே சுருங்கும் பார்.'
வெண்பாவின்படி உலகெங்கும் கனமழை பொழியும். வெள்ளப் பெருக்கால் அழிவுகள் அதிகரிக்கும். ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் விசித்திர நோயால் இறக்கும். பால், மோர், தயிர், நெய் உற்பத்தி குறையும். அவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று இடைக்காடர் சித்தர் பெருமான் சூசகமாகக் கூறியுள்ளார். 

சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது சித்திரை மாதத்தில் என்பதால் இந்த மாதத்தின் முதல் நாளினை விஷு புண்ணிய காலம் என்று அழைக்கின்றனர். வட நாட்டில் இதனை பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் கொண்டாடுகிறார்கள்

கனி காணுதல் !
த்திரை மாதம் பிறப்பதற்கு முதல் நாள் இரவு வீட்டில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பலவகையான பழங்கள், பணம்- காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.

காலையில் எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர். இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் சித்திரை முதல் தினத்தன்று சமையலில் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி வடை பருப்பு சேர்த்துப் படைத்து உண்பர். இன்பமும் துன்மும் கலந்து வருவதே வாழ்க்கை என்பதை உணர்த்தவே சமையலில் மேற்கண்ட பதார்த்தங்கள் சேர்த்துப் படைத்து உண்பது ஐதீகம்

சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தான் என்று புராணம் கூறுகிறது.சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார்.சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.

சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன. சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.

மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருமணம் நடைபெறுவது சித்திரையில்தான்.சித்ராபௌர்ணமியன்று கள்ளழகர்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.ஹனுமன் ஜெயந்தி சித்திரை திங்களில் தான் கொண்டாடப்படுகிறது.பரசுராமன், அவதாரம் நிகழ்ந்தது இந்த மாதத்தில்தான். ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதரித்ததும் இந்த மாதத்தில்தான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...