|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 May, 2011

வெளிநாடு வாழ் இந்திய தம்பதிகள் வழக்கை இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் - உச்ச நீதிமன்றம்

ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது என்பதற்காக இந்திய நீதிமன்றங்கள் அப்படியே அதை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. மாறாக பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்.

ஒரு மைனரின் நலன் குறித்து வெளிநாட்டு நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்பதற்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தை விட்டுவிட வேண்டும் என்றில்லை. அப்படியே அந்த தீர்ப்பை கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நீதிபதி தாகுர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பளி்க்கப்பட்ட வழக்கை இந்திய நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் ருச்சி மாஜூ என்ற பெண்ணின் வழக்கில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அதற்கு தான் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சஞ்சீவ் மாஜு, அவரது மனைவி ருச்சி மாஜூ. அந்த தம்பதிகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு அது கலிபோர்னியா நீதிமன்றம் வரை சென்றது. அவர்களின் மைனர் மகன் தந்தை சஞ்சீவிடம் தான் இருக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து ருச்சி கடந்த 2008-ம் ஆண்டு தனது மகனை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிட்டார். இது குறித்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் சஞ்சீவ் வழக்கு தொடர்ந்தார். அந்த நீதிமன்றமும் ருச்சியை கண்டித்து நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தான் ருச்சி தனது மகனை தன்னிடம் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். தாய், தந்தை, மகன் என மூன்று பேருமே அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் என்பதால் கலிபோர்னியா நீதிமன்றத்திடமே முறையிடுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

ருச்சி தனது கணவர் அடுத்த பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால் இதை சஞ்சீவ் மறுத்ததோடு கலிபோர்னியா நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள வழக்கில் இந்திய நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து வெளிநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தபோதிலும் இந்திய நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...