|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 June, 2011

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் செட்டப்பா ?



ஊழலை ஒழிக்கக் கோரி பத்து நிபந்தனைகளை விதித்து பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதம் ஒரு செட்டப் டிராமா என்று புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலா வர ஆரம்பித்துள்ள ஒரு வீடியோதான் ராம்தேவ் மீதான சந்தேகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. யூடியூபில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை ஜிபி ஜர்னலிஸ்ட் என்ற பெயரில் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் உத்தரகாண்ட் பாஜக முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஒருவருடன் தொலைபேசியில் பேசுகிறார். மறு முனையில் உள்ளவரை பாபுஜி என்று விளித்துப் பேசும் பொக்ரியால், பாபாவின் (ராம்தேவ்) உண்ணாவிரதத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறார் பொக்ரியால்.

இந்த உரையாடல் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது. பாபா ராம்தேவ் தனது ஆசிரமத்தில் இருந்து வந்தது செட்டப் உண்ணாவிரதமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை முடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்தப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராம்தேவ் உண்ணாவிரதத்தில் குதிப்பதற்கு முன்பிருந்தே அவரை காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கடுமையாக விமர்சித்து வந்தார். உண்ணாவிரதத்தில் குதித்து டெல்லி போலீஸாரால் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்ட போதும் அவரைக் கடுமையாக விமர்சித்திருந்தார் திக்விஜய் சிங். ராம்தேவை தாதா என்றும் கூலிப்படையினரை வைத்துக் கொண்டு மத்திய அரசை மிரட்டுகிறார் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

டெல்லி உண்ணாவிரத முயற்சி தோல்வி அடைந்தாதல் ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்திற்குத் திரும்பிய ராம்தேவ் அங்கு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். பின்னர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ கிளிப்பிங்கால் ராம்தேவுக்குப் புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...