|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 July, 2011

சக்சேனா மீது பாய்கிறது குண்டர் சட்டம்?

சன் டி.வி. நிர்வாகி சக்சேனாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல்துறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

 தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையைத் தருவதாக சேலம் திரைப்பட விநியோகிஸ்தர் டி.எஸ்.செல்வராஜுடன் சன் டி.வி. தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ரூ.1.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்தாராம்.
 
ஆனால் ஒப்பந்தப்படி அந்தப் படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமத்தை செல்வராஜுக்கு கொடுக்காமல், சக்சேனா நேரடியாக விநியோகம் செய்தாராம். இதனால் தான் கொடுத்திருந்த ரூ.82.53 லட்சத்தை செல்வராஜ் திருப்பி கேட்டபோது சக்சேனா, செல்வராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
 இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். புகாரின்பேரில் சக்சேனா மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சக்சேனாவை போலீஸôர் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மாநகர போலீஸôர் சக்சனோவை 2 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல முக்கியத் தகவல்களைப் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சேலத்தைச் சேர்ந்த மற்றொரு விநியோகஸ்தர் சண்முகவேல் கொடுத்த புகாரின்பேரில், சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்தது, தாக்கியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.


இந்நிலையில் கோவை, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள், சக்சேனா தங்களிடம் பண மோசடி செய்ததாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தனர். இப் புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் சக்சேனா மீது மேலும் ஒரு மோசடிப் புகார் வந்திருப்பதாகத் தெரிகிறது. இப் புகார் வழக்காக மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சக்சனோ மீது பெண்ணை மிரட்டிய வழக்கு, ஹோட்டலை தாக்கிய வழக்கு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனவே சக்சேனா மீது வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டால், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இதற்காக மாநகர காவல்துறை அதிகாரிகள் வழக்கை வலுப்படுத்துவதற்காக ஆவணங்களையும், சாட்சிகளையும் திரட்டி வருகின்றனராம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...