|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 July, 2011

மனைவி ஒரு மந்திரி...!

திருமணமான பெண்களுக்கு பண்முகத்திறமை உண்டு. சிறந்த இல்லத்தரசியாகவும், கணவருக்கு சிறந்த மனைவியாகவும், குழந்தைகளுக்கு சிறந்த தாயாகவும் கடமையாற்ற வேண்டும். இதில் சிக்கலான விசயம் கணவரிடம் சிறந்த மனைவி என்ற பெயரெடுப்பதுதான். மனைவி என்பதை அதிகாரம் செய்யும் பதவியாக எடுத்துக்கொண்டு கணவரை அடிமையாக நடத்துவபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மனைவியாக இருப்பதை விட கணவருக்கு நண்பியாக இருப்பதுதான் சிறந்தது என்று உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறந்த மனைவியாகயும், ஆலோசகராகவும் திகழ நினைப்பவர்களுக்கு உளவியல் நிபுணர்கள் தெரிவித்த சில யோசனைகள்

மனைவி ஒரு மந்திரி: கணவரின் முதல் ஆலோசகரும், விமர்ச்சகரும் மனைவிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள். மனைவி ஒரு மந்திரி என்பதை அனைத்து சந்தர்ப்பத்திலும் கணவருக்கு உணர்த்த வேண்டும். கணவரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதோடு மட்டும் மனைவியின் கடமை முடிந்து விடுவதில்லை. தவறுகளை எடுத்துக்கூறி திருத்துவதற்கும் உரிமை உண்டு.

புரிதல்தான் வாழ்க்கை; கணவன் மனைவிக்கிடையே ஒரு சில நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொண்டு உடனடியாக தீர்ப்பதில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்த்தாலே குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படாது.

ஈகோவை துரத்துங்கள்: கணவரிடம் பேசும்போது, வெளிப்படுத்தும் வார்த்தைகளில் அன்பும் கனிவும் மட்டுமே இருக்கவேண்டும். அதிகாரமோ, ஆணவமோ தேவையில்லை. சிறு வார்த்தைக் கூட மனதளவில் காயத்தை ஏற்படுத்தி விடும். நீங்கள் பேசும் வார்த்தைகள் எளிதாக உங்கள் கணவரை சென்றடைந்து அதை செயல்படுத்தும் விதமாக அமைய வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் ஈகோவை எட்டிப்பார்க்க விடாதீர்கள்.

கணவருக்கு மதிப்பு: எந்த சந்தர்ப்பத்திலும் பிறரின் முன் கனவரை விமர்ச்சிக்க வேண்டாம். குழந்தைகளின் முன் கூட கணவரை விமர்ச்சிப்பது தவறான முன் உதாரணமாகிவிடும். கணவர் செய்வது தவறாகவே தெரிந்தாலும், தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் பேசி அவரது தவறை புரிய வைக்க வேண்டும்.

மன உளைச்சலை தீர்க்கலாம்: எல்லா நாட்களிலும் படுக்கையறையில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேளைப்பளு, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களில் சில நாட்களில் செயல்பட முடியாத நிலை ஏற்படாலாம். அன்றைய தினத்தில் கணவரை தொந்தரவு செய்வதை விடுத்து அவரை உற்சாகமூட்டும் விளையாட்டுக்களின் ஈடுபடலாம். அது கணவரின் மன உளைச்சலை போக்கி விடும்.

கணவர் என்பவர் காலம் முழுவதும் நம்முடன் வரப்போகிறவர் என்ற எண்ணம் மனைவிக்கு இருக்க வேண்டும். வாழ்வின் சரிபாதி. கணவரின் மதிப்பை உயர்த்துவது மனைவியின் கடமை. அசாதாரண சந்தர்ப்பங்களில் கணவரின் நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு வர நேர்ந்தால் நீங்கள் நடந்து கொள்ளும் விதம்தான் அவர்களிடம் மதிப்பை உயர்த்தும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...