|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 July, 2011

வர்த்தக, முதலீட்டு மையமாகியுள்ளது சென்னை அமெரிக்கா கருத்து!

 சமீப ஆண்டுகளில் சென்னை மாநகரம் வர்த்தக, முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.


அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அடுத்த வாரம் சென்னை வருகிறார்.
அவரின் இந்திய வருகையின்போது தில்லியில் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் சென்னைக்கும் அவர் வருகிறார் என்று அமெரிக்காவின் பொருளாதார, எரிசக்தி மற்றும் வேளாண் துறை இணை அமைச்சர் ராபர்ட் டி ஹார்மட்ஸ் தெரிவித்தார்.


வர்த்தக, பொருளாதார மையமாக உருவெடுத்துள்ள சென்னைக்கு கிளிண்டன் வருவது இதுவே முதல் முறை என ஹார்மட்ஸ் குறிப்பிட்டார். 1960-ல் பட்டதாரி மாணவராக இருந்தபோது தான் சென்னைக்கு வந்திருந்ததாகவும், மீண்டும் இங்கு வருவதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.


ஹிலாரி சென்னைக்கு வரும்போது மாமல்லபுரம் செல்ல வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்த ராபர்ட், அப்படி அவர் அங்கு செல்லவில்லை எனில் அவருக்கு முன்னதாக நான் சீக்கிரம் எழுந்து அங்கு செல்வேன். அந்த இடம் இந்தியா மட்டுமல்ல, உலகமே காண வேண்டிய இடங்களில் ஒன்று என ராபர்ட் ஹார்மட்ஸ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...