|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 July, 2011

வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வெளிநாட்டு அழைப்பு!


வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வகையில் மொபைல் போனில் வெளிநாட்டு அழைப்புகள் வருகின்றன என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட சில எண்களில் துவங்கும் அழைப்புகளை தொடர்பு கொண்டால், தொடர்பு கொள்பவரின் கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாகிறது. அவை அனைத்தும் வெளிநாட்டு அழைப்புகளாக உள்ளன. ப்ரீபெய்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதில் இந்த அழைப்பு கிடைப்பதால், அவர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகை முழுவதையும் இழக்கின்றனர். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை: 239 287, 9051, 9052, 9062, 9106 என்ற எண்களில் தொடங்கும் அழைப்புகள் வந்தால் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். கால் ரிசீவ் செய்தால் வினாடிக்கு 10 ரூபாய் வீதம் காலியாகிவிடும் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...