|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 August, 2011

இந்திய பயோ-டெக் துறை வளர்ச்சி 4 பில்லியன் டாலர்களை தாண்டியது !

கடந்த ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு பயோ டெக் துறை வளர்ச்சி 4 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்திய பயோ டெக் வளர்ச்சி 3 பில்லியன் டாலர்களாக இருந்ததாக ஏன்ஸ்ட் அன் யங் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி, நோய் கண்டறிதல், அதற்கான சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட மருத்துவம் உள்ளிட்டவைகள் பயோ டெக் துறையின் வளர்ந்து வரும் முக்கிய பிரிவுகளாகும். உலக அளவில் இந்திய பயோ டெக் துறை அதிக வேகமாக வளர்ந்து வருவதாக சர்வதேச பயோடெக்னாலஜி கழகம் தெரிவித்துள்ளது. பயோடெக் துறையை மையமாக கொண்டு பல்வேறு நிறுவனங்களும் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போல் உள்நாட்டு பயோ டெக் துறை மாற்றம் பெற்று, வளர்ச்சி கண்டு வருவதாக பயோ டெக் துறை‌யினர் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...