|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 August, 2011

ரயில்வே அதிகாரிகள்-காண்ட்ராக்டர்கள் கூட்டுக் கொள்ளை குறித்து அறிய சிபிஐ இந்த அதிரடி சோதனை!

சென்னையில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பாண்டியன், சேரன் உள்ளிட்ட 7 எக்ஸ்பிரஸ் ரயில்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் 100க்கும் அதிகமானோர் அதிரடி சோதனை நடத்தினர். எம்ர்ஜென்சி கோட்டா, ரயில் பெட்டிகள் பராமரிப்பு, முதல் வகுப்பு ரயில் பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் பெரும் முறைகேடுகள் நடப்பததாக வந்த புகார்களையடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூர் மெயில், திருவனந்தபுரம் மெயில் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சேதனையை நடத்தினர்.

ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்துவது, படுக்கை விரிப்புகளை துவைப்பது ஆகியவற்றின் காண்ட்ராக்டர்களில் பெரும் முறைகேடுகள் நடந்து வருவதாகவும், ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தாமலேயே அதற்கான கட்டணம் காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதில் ரயில்வே அதிகாரிகள்-காண்ட்ராக்டர்கள் கூட்டுக் கொள்ளை குறித்து அறிய சிபிஐ இந்த அதிரடி சோதனையை நடத்தியுள்ளது. அதே போல எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்களை ரயில்வே அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்குவதாகவும் புகார்கள் உள்ளன, இது குறித்து அறிய இந்த ரயில்களில் எமர்ஜென்சி கோட்டாவில் பயணித்த பயணிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் ஓடும் ரயிலில் வைத்தே விசாரணை நடத்தினர்.

கிட்டத்தட்ட 100 அதிகாரிகள் இந்த 7 ரயில்களிலும் அவை ஓடிக் கொண்டிருந்தபோதே சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனைகளையடுத்து மூத்த ரயில்வே அதிகாரிகள் பலர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்யலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...