|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 August, 2011

அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் பாதிப்பு வரலாம்- இன்போசிஸ்!

அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், சாப்ட்வேர் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை பெரும் நிறுவனங்கள் குறைக்க வாய்ப்பிருப்பதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பாக எங்களது வாடிக்கையாளர்கள் 2011ம் ஆண்டுக்கான சாப்ட்வேர், ஐடி ஆகிய திட்டங்களுக்கான செலவை குறைக்கலாம் என்று அந்த நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியார பொறுப்பேற்றுள்ள சிபுலால் கூறியுள்ளார்.

இன்போசிஸ் நிறுவன தலைவர் பதவிலிருந்து நாராயண மூர்த்தி விலகியதையடுத்து நேற்று அந்தப் பொறுப்பை ஏற்றார் கே.வி.காமத். இதையடுத்து தலைமை செயல் அதிகாரியாக இருந்த கோபாலகிருஷ்ணன் துணைத் தலைவராகவும், சிஓஓவாக இருந்த சிபுலால் சிஇஓவாகவும் பொறுப்பேற்றனர்.

பதவியேற்ற பின் நிருபர்களிடம் பேசிய சிபுலால், பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் புதிய திட்டங்கள், விரிவாக்கப் பணிகள் ஆகியவை குறித்த முடிவெடுப்பதில் பெரும் நிறுவனங்கள் காலதாமதம் செய்யலாம். குறிப்பாக ஐடி தொடர்பான செலவீனங்களில் முதலீடு செய்வதை எங்களது வாடிக்கையாளர்கள் ஒத்தி வைக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...