|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 September, 2011

வரும் 2013-2014-ம் ஆண்டில் உலகப்பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, ஜப்பானை மிஞ்சிவிடும் என ஆய்வறிக்கை !

 வரும் 2013-2014-ம் ஆண்டில் உலகப்பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, ஜப்பானை மிஞ்சிவிடும் என ஆய்வறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டு்ள்ளது. இந்தாண்டு மார்ச் நிலவரப்படி உலகப்‌பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு ‌மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறனில் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளதே இதற்கு காரணம். இந்நிலையில் கிரிசில் என்ற பொருளாதார ஆய்வமைப்பின் தலைவரும் பொருளாதார நிபுணருமான சுனில்சின்ஹா கூறியதாவது: கடந்த நவம்பரில் ஜப்பான் , சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகப்பொருளாதாரத்தில் நான்காவது இடத்தில் இருந்தது. தற்போது இந்திய பொருளாதாரம் 7 முதல் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு ஜப்பான் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்தது. எனினும் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் அதன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் வரும் 2013-2014-ம் ஆண்டில் இந்தியா ஜப்பானை மிஞ்சிவிடும். இவ்வாறு அவர் கூறினார்,.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...