|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 September, 2011

எல்லா விஷயமும் சிதம்பரத்திற்கு தெரியும்” ராஜா வக்கீல்!


2 ஜி -ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தெரியும் முதலில் அவரை கூப்பிட்டு ஒரு சாட்சியாககூட விசாரியுங்கள் என்றும், இதற்கு பின்னர் பிரதமரை அழைப்பதா வேண்டாமா என்று கோர்ட் முடிவு செய்யட்டும் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் சிறையில் இருக்கும் ராஜாவின் வக்கீல் வாதாடினார்.

நீதிபதி ஓ.பி.,சைனி முன்பு இன்று விசாரணை நடந்த போது ராஜாவின் வக்கீல் சுஷீல்குமார் வாதிடுகையில் : இந்த ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பான விஷயங்கள் மற்றும் உண்மை நிலை அனைத்தும் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு தெரியும். அதே நேரத்தில் அவரை நான் ஒரு குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. ராஜாவுக்கும், சிதம்பரத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வித கருத்து வேறுபாடும் எழவில்லை. 2003 ல் அமைச்சரவை எடுத்தது தொடர்ந்து வந்த அமைச்சரவை யும் இந்த முடிவையே பின்பற்றியது. ராஜாவும் இதனை பின்பற்றினார் . இதன்படி பார்த்தால் அமைச்சரவையில் உள்ள அனைவரும் விசாரணையை சந்திக்க வேண்டும். ஆனால் எனது கட்சிக்காரர் மட்டும் ஜெயிலில் அடைக்கப்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். 
செக்க்ஷன் 311 படி சிதம்பரத்தை ஒரு சாட்சியாக கூப்பிட்டு விசாரியுங்கள் . அவர் பிரதமர் முன்னிலையில் அறிவுரை வழங்கினார்களா இல்லையா என்பதை அவரே கோர்ட்டில் தெரிவிக்கட்டும். இதன் பின்னர் பிரதமரை அழைக்க வேண்டுமா இல்லையா என்பதை கோர்ட்டே முடிவு செய்யட்டும் என்றார்.

இதற்கிடையில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என சு.சாமி கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு வரும் அக்., 12 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்கிறது சி.பி.ஐ., : ராஜா மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் 2 பேர் மீது நம்பிக்கை மோசடி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதிக்குமாறு சி.பி.ஐ., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் யு.யு.,லலித் தாக்கல் செய்த மனுவில் பொது வாழ்வில் அரசு ஊழியராக இருந்து கிரிமினல் குற்றம் புரிந்திருப்பது நம்பிக்கை மோசடியாகும் (செக்க்ஷன் 409 )மற்றும் 120 , இந்த குற்றத்தின்படி குற்றவாளிகள் அனைவருக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை வரை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த குற்றம் ராஜாவுடன் சிறையில் இருக்கும் கனிமொழி உள்பட 17 பேருக்கும் ‌பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...