|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 September, 2011

எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால்தலை பிரான்ஸ் நாட்டில் வெளியீடு!

பிரான்ஸ் நாட்டில் உள்ள, எம்.ஜி.ஆர்., பேரவை என்ற அமைப்பு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்காக விழா எடுக்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து, முக்கிய பிரமுகர்களை சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து, பல்வேறு அம்சங்களுடன் இலக்கியச் சொற்பொழிவு, இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் உண்டு. ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர்., சிறப்பு தபால் தலையும் வெளியிடுகின்றனர். வரும் செப்., 17 அன்று, பாரிஸ் நகரில் நடைபெறும் எம்.ஜி.ஆர்., விழாவில், நடிகர் மயில்சாமி, இதயக்கனி ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். விஜயனின், எம்.ஜி.ஆர்., புகைப்பட கண்காட்சியும் இடம் பெறுகிறது. இந்திய தூதரக அதிகாரிகள் காயத்ரி கி÷ஷார்குமார், எம்.எஸ்.கன்யால், பிரான்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் பா.தசரதன், பாரீஸ் நகர செயின்ட் தெனிஸ் மேயர் திதியே பயார்டு மற்றும் பிரான்சுவா கிளாத், புளோரன்ஸ் ஹேய், ஜாக்குலின் பவுலா ஆகிய துணை மேயர்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர்., பேரவையின் நிறுவனரும், தலைவருமான முருகு பத்மநாபன் கவனிக்கிறார். மலேசியாவைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும் எம்.ஜி.ஆர்., சிலை நிறுவ, எம்.ஜி.ஆர்., பேரவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...