|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 September, 2011

ஈரல் நோய்களை குணமாக்கும் சிக்கரி!


காலையில் எழுந்தவுடன் காப்பி அருந்த வேண்டும் என்று பலருக்கும் தோன்றுவது இயல்பு. அந்த காபியில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் கலக்கப்படும் சிக்கரி எனப்படும் வேர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சிக்கரி தாவரம் பஞ்சாப் மற்றும் ஆந்திரபிரதேசத்தில் காட்டியல்பாக வளரும். பீகார், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, உள்ளிட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள், வேர் போன்றவை மருத்துவப் பயன் உடையவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இலைகள் மற்றும் வேரில் சிக்கோரியின் எஸ்கியுபின், எஸ்கியு லெட்டின் போன்றவை உள்ளன. கனிகளில் அசிட்டிக், சிட்ரிக், ஃபார்மிக், ஃபியூமரிக் ஹைட்ராக்ஸி அசிட்டிக் லாக்டிக், மாலிக் போன்றவை காணப்படுகின்றன.சூட்டைத் தணிக்கும்: மூச்சுத்திணறலைத் தடுக்கும், அஜீரணத்தைப் போக்கும், தலைவலி போக்கும். மூளைக்கு நன்மருந்து. கசாயம் மாதவிடாய் போக்கினை, ஈரல் நோய்களை குணமாக்கும். யுனானி மருத்துவத்தில் இதயத்துக்கு நன்மருந்தாக பயன்படும், சூட்டைத்தணிக்கும். சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்தும். மூளை பாதிப்புகளுக்கு நல்லமருந்து. செரிமானத்துக்கு உதவும், தூக்கம் உண்டாக்கும். வேர் ( உலர்ந்தது) அஜீரணத்தைப் போக்கும். சிறுநீர்க் கழிவை அதிகரிக்கும். மஞ்சள்காமாலை, கல்லீரல் பெரிதாதல், கீழ்வாய் நோய்களைப் போக்கும். கசப்பான நன்மருந்து.காப்பியின் சுவை கூட்டும் சிக்கரி: காப்பி பிரியர்களுக்கு சிக்கரி சேர்த்தால்தான் பிடிக்கும். சிக்கரியில் "கேஃபீன்" இல்லை. ஆனால் அதனை காப்பியுடன் கலந்தால் "கும்"மென்று ஒரு "வறுபட்ட" வாசனை தூக்கி நிற்கும். அதனால் இந்தக் கலவையை பலர் விரும்புகின்றனர். மேலும் அது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, ஈரலுக்கும் நல்லது என்கிறார்கள். விலையும் காப்பியைவிட மிகக் குறைவு. ஆகையால் சுமார் இருநூறு ஆண்டுகளாக காப்பியுடன் சிக்கரி கலந்து அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. 80% காஃபீ + 20% சிக்கரி "பிளெண்ட்" என்பது இப்போதெல்லாம் "பில்டர் காப்பி"ப்பொடியின் நிலையான அலகாகிவிட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...