|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 October, 2011

நாடு முழுவதும் 11 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் மத்திய அரசு!


கடந்த 2010ம் ஆண்டில், 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டன. 5,484 குழந்தைகள் கற்பழிக்கப்பட்டன. 1,408 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டன' என, மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை: கடந்த ஆண்டில், நாடு முழுவதும் நடந்த கொடூரமான குற்றங்களில், 33 ஆயிரத்து 908 பேர் கொல்லப்பட்டனர். இதில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 15 ஆயிரத்து 787 பேர்; 1,408 பேர் அப்பாவி குழந்தைகள். அதிகபட்சமாக, உத்தரப் பிரதேசத்தில் 4,456 மற்றும் பீகாரில் 3,362 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கடுத்த இடங்களில், மகாராஷ்டிரா (2,837), ஆந்திரா (2,538) மற்றும் தமிழகம் (1,875) உள்ளன. அதேபோல, நாடு முழுவதும் நடந்த பல்வேறு கற்பழிப்புச் சம்பவங்களில், 5 ஆயிரத்து 484 குழந்தைகள் கற்பழிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், 1,182 செக்ஸ் கொடுமைகளுக்கு ஆளாகின. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த ஆண்டில் 10 ஆயிரத்து 670 குழந்தைகள் கடத்தப்பட்டன. குழந்தைகள் கடத்தலில், தலைநகர் டில்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு, 2,982 குழந்தைகள் கடத்தப்பட்டன. இதற்கு அடுத்ததாக, பீகாரில் 1,359, உ.பி.,யில் 1,225, மகாராஷ்டிராவில் 749, ராஜஸ்தானில் 706, ஆந்திராவில் 581 குழந்தைகளும் கடத்தப்பட்டன. இவ்வாறு, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...