|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 October, 2011

போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராக - ஆஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!


இந்தப் போர்க்குற்றவாளியை கைது செய்து கூண்டிலேற்றுங்கள் என்று கோரி ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆஸ்திரேலிய தலைநகர் பெர்த்தில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கும் மகாராணியாக உள்ள பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெர்த் நகரில் தமிழர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். ஆஸ்திரேலியாவில் வாழும் வெவ்வேறு இனக்குழுக்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தன.  இதில் தமிழ் பிரமுகர்கள் யோகன் தர்மா, அஜந்தி போன்றவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "இந்தப் போர்க்குற்றவாளியை கைது செய்து கூண்டிலேற்றுங்கள்," "போர் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?" என்றெல்லாம் கோஷமிட்டனர். 

மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டியவர் அல்ல- முள்ளுக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டியவர் என்று போராட்டத்தில் பங்கேற்ற யோகன் தர்மா குறிப்பிட்டார். ஈழப் போரில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 79பேரை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார். தயவுசெய்து ஆஸ்திரேலிய அரசு ராஜபக்சேவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நாடு திரும்பிப் போக அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்றும், அங்கு அமைதி திரும்பி மக்களின் சுதந்திரமும், தனி ஈழத்துக்கான உறுதியும் கிடைக்கும் வரை சேர்க்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைச் செய்யும் அதிகாரம் காமன்வெல்த்துக்கு உள்ளதாகக் கூறிய அஜந்தி, ஏற்கெனவே பாகிஸ்தான், பிஜி, நைஜீரியா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளை நீக்கிய சம்பவத்தை நினைவூட்டினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...