|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 November, 2011

எங்களை ஆலோசிக்காமல், பெட்ரோல் விலை உயர்த்தப்படும் பட்சத்தில், ஆதரவை விலக்கிக்கொள்வோம் மம்தா பானர்ஜி !

 நிருபர்களிடம் அவர் கூறுகையில், "பெட்ரோல் விலையை உயர்த்துவது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோல் விலை அதிகரிக்கப்படுகிறது என்கிறீர்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்?பெங்காலில் திரிணாமுல் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியில் உள்ளது. ஆனால், மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி நடத்துகிறது. பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் மிரட்டல் விடுக்கவில்லை. நாங்கள் பல முறை அவமதிக்கப்பட்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் எங்களுக்கென்று அறை கூட கிடையாது. எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மீண்டும் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தினால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம். யாராவாது ஒருவர் பூனைக்கு மணி கட்டித்தானே ஆகவேண்டும்," என்றார் மம்தா பானர்ஜி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...