|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 November, 2011

காங். எதிராக தேர்தல் பிரசாரம் ஹசாரே மீண்டும் எச்சரிக்கை!

எதிர்வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹஜாரே இன்று எச்சரித்தார்.கடந்த 19 நாட்களாக மெளன விரதம் கடைபிடித்து வந்த அண்ணா ஹஜாரே இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் வைத்து தனது விரதத்தை முடித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், "வருகிற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக எங்கள் இயக்கம் பிரசாரம் மேற்கொள்ளும். 

யார் எதைச் சொன்னாலும் கவலையில்லை. லோக்பால் மசோதா நிறைவேறவில்லை என்றால், நான் பிரசாரம் மேற்கொள்வது உறுதி. குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் நிறைவேறவில்லை என்றால், மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கக் கூடாது.  லோக்பால் நிறைவேறவில்லை என்றால், மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன். பிறகு, நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்" என்றார்.மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "நான் பிஜேபிக்காக பிரசாரம் மேற்கொள்ளமாட்டேன். காங்கிரஸுக்கும் பிஜேபிக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை," என்றார் அண்ணா ஹஜாரே. லோக்பால் மசோதாவை வலுவற்றதாக உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டிய ஹஜாரே, "அரசின் எண்ணம் சந்தேகம் அளிக்கிறது. ஜன் லோக்பால் மசோதாவை பலவீனமானதாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. நாங்கள் பரிந்துரைத்த அம்சங்கள் அனைத்தும் லோக்பாலில் இருக்க வேண்டும்," என்றார் அவர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...