|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 December, 2011

2020ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிற்கு 5 வது இடம் ஆய்வில்.


2020 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் உலகின் முதல் 10 உலக நாடுகளில், இந்தியா ஐந்தாவது இடத்திற்கு வந்துவிடும் என்று பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இயங்கி வரும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம், உலகின் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலை செவ்வாய்கிழமையன்று வெளியிட்டது.அதில் இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சியில், இங்கிலாந்தினை, பிரேசில் முந்திவிட்டது எனவும் ஆறாவது இடத்தில் இருந்த இங்கிலாந்தினை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை பிரேசில் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த வரிசையில் இந்தியா தற்போது 10 இடத்தை பிடித்துள்ளது.

2020 ல் இந்தியா மேலும், இந்தாண்டில் 10வது இடத்திலுள்ள இந்தியா, 2020ல், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யூரோ மண்டல பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட்டால், அம்மண்டலப் பொருளாதாரம், 0.6 சதவீதம் மட்டுமே சுருங்கும் எனவும், பிரச்னை தீராவிட்டால், பொருளாதாரச் சுருக்கம், 2 சதவிகிதம் அளவிற்கு இருக்கலாம் எனவும் அந்த மையம் கூறியுள்ளது.இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மையத்தின் தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ், வருங்காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே செல்லும் எனவும், ஆசிய நாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிய வருவதாக, கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...