|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 December, 2011

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் அமெரிக்காவுக்கு ஈரான்!


ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால், அரபு நாடுகளில் இருந்து எண்ணெய் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) அடைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த, அந் நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.


இந் நிலையில் அந்த நாட்டின் எண்ணெய்யை வாங்குவதை தடை செய்யவும் ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. இதற்காக அந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது, ஈரானின் மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்குவது போன்ற திட்டங்களை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் முன் வைத்துள்ளன. உலகில், ரஷ்யா, செளதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஈரானின் பொருளாதாரம் எண்ணெய் ஏற்றுமதியையே பெருமளவு சார்ந்துள்ளது. இப்போது இதையே முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பதிலடிக்கு ஈரான் தயாராகி வருகிறது.

செளதி உள்பட வளைகுடாவில் உள்ள நாடுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் Strait of Hormuz வழியாகத் தான் வெளியுலகை அடைந்தாக வேண்டும். செளதி-ஐக்கிய அரபு நாடுகள்-ஈரானுக்கு இடையே உள்ள இந்த கடல் பாதையை அடைக்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. மேலும் இந்தப் பகுதியில் ஈரான் கடற்படை போர் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இந்தப் பாதை வழியாகவே உலகில் கடல் வழியாக கொண்டு செல்லப்படும் மொத்த கச்சா எண்ணெயில் 5ல் 1 பங்கு பயணித்தாக வேண்டும் என்ற நிலையில் இந்தப் பாதையை ஈரான் மூடினால், இந்தியா உள்பட உலகெங்கும் பெரும் பெட்ரோலிய தட்டுப்பாடு ஏற்படும். இந் நிலையில், இந்தப் பாதையை மூடினால் கடும் விளைவுகள் ஏற்படும் என ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...